உடல்நலன் மீதான அக்கறை எப்போது வருமென்றால், நமக்கோ, நமக்கு தெரிந்தவர்களுக்கோ உடல்நிலை சரியில்லாத போது வரும். நாம் நம் உடலை சரியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற அக்கறை ஏற்படும். கொரோனா (கோவிட் 19) பெருந்தொற்று காலம் இன்னமும் முழுமையாக முற்றுப்பெறவில்லை. ஆனால், உலகம் இயல்புநிலைக்கு திரும்பியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இன்றைய உலகமயமாக்கல், உலக நாடுகளை ஒன்றினைத்து இருக்கின்றது. இதனால், பெருந்தொற்றாக இருந்தாலும் சரி, பொருளாதார பாதிப்பாக இருந்தாலும் சரி, ஒரு நாட்டுக்கு பாதிப்பென்றால், அதன் விளைவு பிறநாடுகளுக்கும் வந்துவிடுகிறது. சிங்கப்பூரில், முக கவசம் அணிவதில் சில தளர்ச்சிகளை கொண்டு வந்தாலும், இந்த ஊர் மக்கள் இன்னமும் முக கவசம் அணிகிறார்கள். காரணம், கொரோனா தொற்றும், அதைத்தொடர்ந்து Flu தொற்றும் இன்னமும் விடவில்லை என்கிற காரணம் தான். பலரையும் போல, கொரோனா லாக்டவுன் காலத்தில் தான், நான் நடைபயிற்சி, உடற்பயிற்சியை தொடங்கினேன். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நடை பயிற்சியை செய்த நான், கடந்த இரண்டு மாதங்களாக ஒரு ஜிம்மில் இணைந்து உடற்பயிற்சியையும் மேற்கொள்கிறேன். இதோடு, உணவை உட்கொள்வதிலும் சில கட்டுப்பாடுகளை, பேலியோ டயட், intermittent fasting போன்ற வழிகளில் செய்துவருகிறேன். இருப்பதிலேயே, பெரிய மகிழ்ச்சி எது தெரியுமா? நம் உடல் நாம் சொல்லும் பேச்சை கேட்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி தான்! இதை நாம் எப்போது உணருவோம் என்றால், ஏதேனும், உடல்நல பிரச்சனை வந்து, நம் உடல் நாம் சொல்லும் பேச்சை கேட்காத போது தான் உணருவோம். நாற்பது வயதை நெருங்கும் போது, உடல் நலன் மீதான அக்கறை தொடங்குவதற்கு இது தான் காரணம். உடல்நலன் மீதான அக்கறை எப்போது வருமென்றால், நமக்கோ, நமக்கு தெரிந்தவர்களுக்கோ உடல்நிலை சரியில்லாத போது வரும். நாம் நம் உடலை சரியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற அக்கறை ஏற்படும். கொரோனா (கோவிட் 19) பெருந்தொற்று காலம் இன்னமும் முழுமையாக முற்றுப்பெறவில்லை. ஆனால், உலகம் இயல்புநிலைக்கு திரும்பியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இன்றைய உலகமயமாக்கல், உலக நாடுகளை ஒன்றினைத்து இருக்கின்றது. இதனால், பெருந்தொற்றாக இருந்தாலும் சரி, பொருளாதார பாதிப்பாக இருந்தாலும் சரி, ஒரு நாட்டுக்கு பாதிப்பென்றால், அதன் விளைவு பிறநாடுகளுக்கும் வந்துவிடுகிறது. சிங்கப்பூரில், முக கவசம் அணிவதில் சில தளர்ச்சிகளை கொண்டு வந்தாலும், இந்த ஊர் மக்கள் இன்னமும் முக கவசம் அணிகிறார்கள். காரணம், கொரோனா தொற்றும், அதைத்தொடர்ந்து Flu தொற்றும் இன்னமும் விடவில்லை என்கிற காரணம் தான்.
பலரையும் போல, கொரோனா லாக்டவுன் காலத்தில் தான், நான் நடைபயிற்சி, உடற்பயிற்சியை தொடங்கினேன். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நடை பயிற்சியை செய்த நான், கடந்த இரண்டு மாதங்களாக ஒரு ஜிம்மில் இணைந்து உடற்பயிற்சியையும் மேற்கொள்கிறேன். இதோடு, உணவை உட்கொள்வதிலும் சில கட்டுப்பாடுகளை, பேலியோ டயட், intermittent fasting போன்ற வழிகளில் செய்துவருகிறேன். இருப்பதிலேயே, பெரிய மகிழ்ச்சி எது தெரியுமா? நம் உடல் நாம் சொல்லும் பேச்சை கேட்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி தான்! இதை நாம் எப்போது உணருவோம் என்றால், ஏதேனும், உடல்நல பிரச்சனை வந்து, நம் உடல் நாம் சொல்லும் பேச்சை கேட்காத போது தான் உணருவோம். நாற்பது வயதை நெருங்கும் போது, உடல் நலன் மீதான அக்கறை தொடங்குவதற்கு இது தான் காரணம்.
இன்னும் எத்தனை காலத்துக்கு நம் உடல் நாம் சொல்லும் பேச்சை கேட்கும் என்கிற எண்ணம் தொடங்கும். நம் பெற்றோர், நமது தாத்தா பாட்டி போன்றோரை பார்த்து, அவர்களின் முதுமையில் இருந்து கற்க தொடங்கியிருப்போம். எனக்கான உடல்நலன் சார்ந்த பாடங்கள் என் தாத்தா பாட்டியிடம் இருந்தே வந்தது. அப்பாவழியில் இருந்த ஆத்தா தாத்தா 90 வயதை கடந்து வாழ்ந்தவர்கள். சிறுவயதில் இருந்தே, என் தாத்தாவின் உடல்நலன், உணவு பழக்கவழக்கம் ஆகியவற்றை பார்த்து வளர்ந்தேன். நேரத்திற்கு சாப்பிடுவார்கள். அளவாக சாப்பிடுவார்கள். இன்னொரு பக்கம், அம்மாவின் அம்மாவும் உடல்நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். யோகா கற்றுக்கொண்டார். மண்வளப்பயிற்சி கூடங்களுக்கு செல்வார். நானும் ஒரு காலத்தில் இந்த உடற்பயிற்சியை கற்றுக்கொண்டேன். என்னைப் பார்க்கும் போதெல்லாம், விடாமல் அந்த உடற்பயிற்சியை செய்யச் சொல்வார்.
இன்று என் அம்மா, தொடர்ச்சியாக நடைப்பயிற்சி செய்துவருகிறார். ஒருநாள் விடாமல், நாள் தோறும் அவர்கள் இதை செய்து வருவதை பார்த்து தான், நமக்கும் ஒரு உந்துதல் ஏற்படுகின்றது.